முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொதுச் செயலரை இன்று சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஐ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டெரெசை இன்று சந்திக்க உள்ளார்.

நியூயார்க் நகரில் இன்று மாலை 3 மணி அளவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தின் இடையே ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை சந்தித்து பேச உள்ளார்.  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பில் உலக அமைதி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் பற்றி பேச உள்ளனர். இந்நிகழ்வில், ஐ.நா பொது செயலருடன் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை பற்றியும் விவாதிக்க உள்ளேன் என மைக் பாம்பியோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மைக் பாம்பியொ இன்று செர்பிய அதிபர் அலெக்சாண்டரையும் சந்திக்க உள்ளார் என அமெரிக்கா அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து