முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பலத்த மழை காரணமாக ஊட்டியில் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 10-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்தியது. உதகமண்டலம் மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலும், அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டும் உதகமண்டல மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும்இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வானது வரும் 25-ம் தேதி அதே தேர்வு மையத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை, உதகை தேர்வுமைய விண்ணப்பதாரர்கள் மட்டும், தேர்வாணைய இணைய தளத்திலிருந்து www.tnpscexams.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து