முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி. மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் புகைப்படம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2006 - ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான டி -20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதாவது ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற விழிப்புணர்வுகளுக்கு சாரா டெய்லர் வெளியிட்ட போட்டோ மீண்டும் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணத்தையும் சாரா ஏற்கனவே தெரிவித்து விட்டார். இது தொடர்பாக சாரா டெய்லர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து