முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையி்ல் இந்திய விமானப்படை தயாராக உள்ளது: தளபதி தனோவா

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எல்லையி்ல் இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோவா ஆகியோர் இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சிகள் குறித்த புத்தகங்களை வெளியிட்டனர். பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையி்ல் இந்திய விமானப்படை எப்போதும் தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார். மேலும் இந்திய எல்லையில் எதிரி நாட்டின் நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக உள்ளது. பயணிகள் விமானம் எல்லையை தாண்டி வந்தாலும், அந்த சூழ்நிலையை கருதி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு தனோவா கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் ஜாவேத் பஜ்வாவுக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகால நீட்டிப்பு குறித்து இந்திய விமானப்படைத் தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறும் போது, அவர்களின் அமைப்பு என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது எனக்குத் தெரியாது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து