கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      உலகம்
3 child s birth single delivery 2019 08 20

நியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின் - டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக் கொண்டார். இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது. அத்துடன் டேனெட் கில்ட்சுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதும் தெரிந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து