ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
hockey india beat japan 2019 08 20

டோக்கியோ : டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஹாக்கி போட்டிக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 6-3 என அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் நீலகண்ட சர்மா கோல் அடித்தது சிறப்பான தொடக்கம் கொடுத்தார். ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் நிலம் சங்ஜீப் செஸ் கோல் அடித்தார். 9-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார்.25-வது நிமிடத்தில் ஜப்பான வீரர் கென்டாரோ கோல் அடித்தார். ஆனால் மந்தீப் சிங் 29 மற்றும் 30-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 36-வது நிமிடத்தில் ஜப்பானின் கென்ட்டா டனக்கா கோல் அடிக்க, புர்ஜந்த் சிங் 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதனால் இந்தியா 6-2 என வலுவான வகையில் முன்னிலைப் பெற்றது. 52-வது நிமிடத்தில் ஜப்பான வீரர் கஜுமா முரட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 6-3 என இருந்தது. கடைசி 8 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 6-3 என இந்தியா வெற்றி பெற்றது.இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவ இந்தத் தொடரின் லீக்கில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இரு அணிகளும் இன்று இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து