இந்திய பெண்ணை கரம் பிடித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
pak cricketer married indian women 2019 08 21

துபாய் : பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. 25 வயதான இவர் இந்தியாவின் அரியானாவைச் சேர்ந்த ஷமியா அர்ஜூ (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் துபாயில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொள்ள இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்திய வீரர்கள் கலந்து கொண்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஷமியா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். ஷமியாவின் குடும்பம் அரியானாவில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார்கள். இந்திய பெண்ணை கரம் பிடித்த ஹசன் அலிக்கு சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து