முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ தலைவருக்கு கலாம் விருது - முதல்வர் எடப்பாடி வழங்கினார்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அறிவித்திருந்த அப்துல்கலாம் விருதினை நேற்று  வழங்கினார்.

நாட்டின் 71-வது சுதந்திர தின விழா கடந்த 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். இதனையடுத்து சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார். இதில் டாக்டர் அப்துல்கலாம் விருது போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரித்தீக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிக வரித்துறை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், சில சூழ்நிலைகளால் அன்றைய தினம் அவரால் வர இயலவில்லை. அதை தொடர்ந்து நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விருது மற்றும் காசோலையை பெற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து