முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹுவாய் நிறுவன அதிகாரியை விடுதலை செய்ய சீனா கோரிக்கை

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா : கனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய் நிறுவனம் அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் வர்த்தக ரகசியங்களை திருட முயற்சித்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. அதன் காரணமாக ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சு கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு ஹுவாய் நிறுவனம் மற்றும் சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதற்கு பதிலடியாக சீனாவில் இரு கனடா நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மெங் வான்சு சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்ல, தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்திய செயல். இது ஒரு மிக மோசமான நடத்தை ஆகும். கனடாவை சேர்ந்த இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டது முற்றிலும் மாறுபட்ட விஷயம். அவர்கள் சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து