21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
russia floating nuclear plant 2019 08 25

மாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.

அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் பெரிய கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதில்தான் அணு உலை பொருத்தப்பட்டு உலகின் முதலாவது மிதக்கும் அணு உலை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த அணு உலையை தாங்கியுள்ள கப்பலானது ரஷ்யாவின் முர்மான்ஸ்க் என்ற துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. சுமார் 5 ஆயிரம் கி.மீட்டர் தூரத்திலுள்ள சைபீரியாவுக்கு இந்த கப்பல் செல்லவுள்ளது. பருவநிலையைப் பொருத்து சுமார் 4 முதல் 6 வார காலங்கள் வரை இந்த அணு உலைக் கப்பலின் பயணம் அமையும். இது குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த அணு சக்தி அமைப்பான ரோசடோம் வட்டாரங்கள் கூறும் போது,

இந்த அணு உலையானது, மரபு வழி அணு உலைக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் பனிக்கட்டியால் இது மூடப்பட்டிருக்கும். இதுபோன்ற அணு உலைகள் பலவற்றைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முடிவில் ரஷ்யா உள்ளது. அணு உலை உற்பத்தியில் இது மிகப்பெரிய புரட்சி என்று தெரிவித்தன. இதனிடையே இதுபோன்ற மிதக்கும் அணு உலைகளுக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் பனிக்கட்டி மீதான செர்னோபில் என்றும், அணுசக்தி டைட்டானிக் என்றும் வர்ணிக்கின்றனர். 144 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணு உலை கப்பலைக் கட்டும் பணிகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவுற்று பயணத்தை தொடங்கியுள்ள இந்த கப்பல் சைபீரியாவிலுள்ள சுகோட்கா துறைமுகத்துக்கு செல்லவுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் அணு சக்தித் துறையைச் சேர்ந்த கிரீன்பீஸ் ரஷ்யா அமைப்பின் தலைவர் ரஷித் அலிமோவ் கூறும் போது, எந்த வகையான அணு உற்பத்தி நிலையமாக இருந்தா லும் அங்கிருந்து அணுக் கதிர் வீச்சு, அணுக்கழிவுகள் வெளிப்படும். அங்கு விபத்துகளும் ஏற்படலாம். ஆனால் அகாடமிக் லோமோ னோசோவ் கப்பல், புயலையும் தாங்குமளவுக்கு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 21 ஆயிரம் டன் எடை கொண்டது. 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 2 அணு உலைகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து