வனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
earthquake 2019 06 17

ஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 1,750 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தீவு நாடு வனாட்டு. இது புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது. இது சோலா நகருக்கு 63 கி.மீ. தென் மேற்கில் 114.65 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது. இந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பதற்றம் நிலவியது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து