பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
PM Modi-Man Ke Bath 2019 08 25

புது டெல்லி : பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மான்கீ பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலியில் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார். அவர் நேற்று பேசும் போது கூறியதாவது,

இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகி கொண்டிருக்கிறது. அக்டோபர்  2-ம் தேதியன்று வரும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர். சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது. அவரது 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினையும் நாம் தொடங்க வேண்டும். இந்த வருடம் காந்தி ஜெயந்தியை, அன்னை இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து