முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சக குழு: மத்திய அமைச்சர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி  : மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை எங்கெங்கு நடைமுறைப்படுத்தலாம் என்பதை அறிவதற்காக சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பிலான குழு நாளை 27-ம் தேதி, 28-ம் தேதிகளில் காஷ்மீர் செல்கிறது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு பிரிவு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது மத்திய அரசு.

மாநிலத்தில் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் தடுப்படுதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை, பாதுகாப்பு கெடுபிடிகளை மாநில நிர்வாகம் வகுத்துள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயன்றபோது அவர்களை அனுமதிக்க மாநில நிர்வாகம் மறுத்து விட்டது.

இந்நிலையில், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஒரு குழுவினர் வரும் 27,28-ம் தேதி காஷ்மீர் செல்லகின்றனர். சிறுபான்மை விவாகரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் இந்த பயணத்தில் உடன் செல்கிறார்கள். காஷ்மீரில் பள்ளிகள்,கல்லூரிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் எங்க அமைக்கலாம் ஆகியவற்றை அடையாளம் காண்பார்கள். சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த அனைத்து சாதமான அம்சங்களையும் நோக்குவார்கள்.

பிரிவினைவாதிகள் கைகளில் சிக்கி மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்பதற்காகவே, ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த விதமான தவறான தகவல்களும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதற்காக ஒரு பொறுப்பான அரசின் பணியாகும். எங்கள் குழு முதலில் காஷ்மீர் மட்டும் செல்கிறது.  லடாக், ஜம்முவுக்கு பின்னர் செல்வார்கள் அதற்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின் மத்திய அரசின் குழு அங்கு செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து