முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வெள்ளத்தின் போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள வெள்ளத்தில் கடந்த ஆண்டு தன்னை யார் எனக் காட்டிக் கொள்ளாமல் சாதாரண மனிதர் போல் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கருத்து சுதந்திரம் குறைந்து விட்டது எனக் கூறி தனது பதவியை கண்ணன் ராஜினமா செய்துள்ளார். தற்போது யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹாவேலியில் மின்சக்தி, நகரமேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் பிரிவில் பணியாற்றி வரும் கண்ணன் கோபிநாதன் தனது பதவியை கடந்த 21-ம் தேதி ராஜினாமா செய்து கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இவரின் கடிதம் மீது உயர் அதிகாரிகள் எந்தவிதமான முடிவையும் இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், புதுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, பிர்லா இன்ஸ்டியூட்டில் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பு முடித்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சியாகி பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனும் அடையாளத்தை தெரியாமல் செங்கனூரில் உள்ள நிவாரண முகாமில் பணியாற்றினார். கடைசி வரை தனது அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் பணியாற்றிய நிலையில் சக அதிகாரி வந்து கண்டுபிடித்த போதுதான் கண்ணன் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனும் விவரமே தெரியவந்தது. அதன்பின் கேரள வெள்ள நிவாரணமாக ரூ. ஒரு கோடியை கண்ணன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து