68-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Vijayakanth-CM Edapadi 2019 08 25

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

68-வது பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கலை ஆர்வம் மிக்கவராய் திரைத் துறையில் உங்களுக்கென ஒரு தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் பொது வாழ்விலும் சிறந்த பணியாற்றி வரும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும்  தொடர்ந்து மக்கள் பணியாற்றும் வண்ணம் அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு  எனது  உளங்கனிந்த  பிறந்த நாள் வாழ்த்துகளை மீண்டும்  உரித்தாக்குகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து