முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே சதுர்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே சதுர்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஏராளமான கலைஞர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத சிலைகள் தயாரிக்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டி போக்குவரத்து நகரில் பண்ட்ருட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிலை தயாரிப்பு பணி இரவு பகலாக நடந்து வருகிறது. 1 அடி முதல் 12 அடி வரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகளை ஏராளமான மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிலைகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று சிலை தயாரிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து