உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      தமிழகம்
CM Edapadi greeting PV Sindhu 2019 08 25

சென்னை : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிவி சிந்து இந்த முறை எப்படியாவது தங்கம் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார்.ஆட்டம் தொடங்கியது முதலே பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிவி சிந்து படைத்துள்ளார்.

தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.விசிந்துவுக்கு தமிழக அரசின் சார்பிலும், மக்கள் சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாடே அவரை நினைத்து பெருமைப்படுகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி இந்த மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கும், அவருக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கும், பயிற்சி அளித்தவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து