பிரிட்டன் பிரதமர் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      உலகம்
PM Modi-UK PM 2019 08 26

பாரீஸ் : ஜி 7 மாநாட்டுக்கு இடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ந் தேதி புறப்பட்டார். இதில் பிரான்சில் முதற்கட்ட நிகழ்ச்சி களையும், அமீரக பயணத்தையும் முடித்த மோடி, பிறகு பஹ்ரைன் போய் சேர்ந்தார். இந்த அரபு தேசத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். பஹ்ரைனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி  மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.

அங்கு நடைபெறும் ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பாக சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வுகளில் பிரதமர் மோடி பேசினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றபோதும், அந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் இந்தியா-பிரிட்டன் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்” என பதிவிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து