ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து - விமான உற்பத்தி பணிகள் தீவிரம்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      உலகம்
russia military transport 2019 08 26

மாஸ்கோ : ரஷ்யாவில் கனரக ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.  

ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் மூலம் Il-76MD-90A வகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் ஏவியேசன் எஸ்.பி. நிறுவனத்தில் நடைபெற்றது. தற்போது விமானங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் விமானத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் இன்னும் உறுதி படுத்தவில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து