முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாசின் ஒடேசா மற்றும் மிட்லாண்ட் நகரங்களுக்கு இடையே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள சாலையில் அபாயகரமான முறையில் அதிவேகத்தில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, டிரைவரை காரில் இருந்து இறங்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 3 போலீசாரின் உடலில் குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து காரில் தப்பி சென்ற அந்த நபர், வழியில் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொண்டே சென்றார்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என அனைவரையும் சுட்டதில், பலர் குண்டு பாய்ந்து விழுந்தனர்.  இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டுக்கு 5 பேர் பலியாகினர் என்றும், 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 2 வயது குழந்தை உள்பட 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.  தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து