முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முழு முதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் பிரசித்தி பெற்ற நன்மை தரும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகத்திலேயே சிறப்புமிக்க ஒரே கல்லால் ஆன 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர் அருள்பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 நன்மை தரும் விநாயகருக்கும் பக்தர்கள் தாங்களே பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரெயிலடி சித்தி விநாயகர் உட்பட பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
மேலும் வீடுகளில் பொதுமக்கள் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து பூஜைகள் நடத்தினர். இந்த வருடம் திண்டுக்கல்லில் புதுமையாக விநாயகருடன் விதைப்பந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின் கரைப்பதற்கு பதிலாக புதைத்து மரக்கன்றாக வளர்க்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி விதைப்பந்து விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இதனை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து