முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பூங்கா விரைவில் தேனி மாவட்டத்தில் அமையும் சிறு பழங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், கம்பத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சிறு பழங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது வேளாண்மை இல்லையேல் இந்த உலகமே இல்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி என விவசாயியை பற்றி திரைப்படங்களில் பாடியுள்ளார். தற்போது இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் விவசாயிகளின் நிலை உயர பாடுபட்டு வருகிறார். பருவமழை பொய்ப்பது, பருவமழை மாறி பொழிவது என இருப்பதால் விவசாய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தற்போது சொட்டு நீர் பாசனம், மற்றும் பல புதிய முயற்சிகளை செய்து அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூட வட்டி இல்லா கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய வழியில் தற்போது அம்மா அரசும் விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு சார்பாகவும் வேளாண் பெருமக்களுக்காக வருடம் தோறும் ரூபாய் 6000 வழங்குதல் உள்ளிட்ட  பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சிறு பழங்கள் என்பது குறைந்த பகுதியில் அதிக சாகுபடி செய்யும் பழங்களாகும். அதில் பலாப்பழமும், இலந்தைபழம் உள்ளிட்ட பழங்களும் அடங்கும். சிறுபழங்கள் நமக்கு மிகுந்த ஊட்டச்சத்து வழங்கும் பழங்களாகும். பாராளுமன்றத்தில் வேளாண்மைதுறை மசோதாவின் போது தமிழக அரசின் திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நமது தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, முல்லைபெரியார், என சிறப்புகளை பெற்று அனைத்து பயிர்களும் விளைவிக்கும் மாவட்டமாக திகழ்கிறது. வெளிநாட்டில் பிறந்து நமது மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக தனது சொத்தையெல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களால் நமது மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. நமது மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து