முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்?

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      அரசியல்
Image Unavailable

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்காக இப்போதிருந்தே தயாராகும் வகையில் பிரியங்கா காந்தி தலைவராகவும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் உ.பி. மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அப்போதைய தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். அவருடன் சேர்ந்து உ.பி. மேற்குப் பகுதிக்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ராகுல் காந்தியும் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா பொதுச் செயலாளர் பதவியையும், ராகுல் காந்தி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ஆனால், பிரியங்கா காந்தி தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது மக்களைச் சந்திப்பதும், நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவதும் என தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், தொழில் சிக்கல்கள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டி அவ்வப்போது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் பிரியங்கா காந்தி. மாநிலத்தில் செயலாக்கத்துடன் உள்ள அரசியல்வாதியாகவே பிரியங்கா காந்தி வெளிப்படுத்தி வருகிறார். இதனால், வரும் 2022-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைமையும், மாவட்ட அளவில் துணைத் தலைவர்களாக பெண் தலைவர்களும், இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பும் கிடைக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் குழு மாற்றம் பெற உள்ளது என்று மாநில நிர்வாகிகள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து