ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-3

Source: provided

ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான முகமது நபி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்ற பின் முதன்முறையாக இந்தியாவை எதிர்த்து விளையாடியது. அதன்பின் அயர்லாந்து எதிர்கொண்டது. தற்போது வங்காள தேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மானேஜர் உறுதிப்படுத்தியுள்ளார். 34 வயதாகும் முகமது நபி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.சி.சி. சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாத ஆப்கானிஸ்தான், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் உடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி டேராடூனில் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து