இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது வீராங்கனைக்கு இடம்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-6

Source: provided

புது டெல்லி : தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ம் தேதி சூரத்தில் நடக்கிறது.

ஒரு நாள் தொடர் அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக மிதாலிராஜ் நீடிக்கிறார். சமீபத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ஓய்வு பெற்று விட்டதால் 15 வயதான இளம் வீராங்கனை அரியானாவை சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. மே மாதம் நடந்த பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் நன்றாக ஆடியதால் ஷபாலிக்கு தேசிய அணியின் கதவு முதல்முறையாக திறந்துள்ளது.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் மிதாலிராஜ் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ஹேமலதா, ராஜேஸ்வரி கெய்க்வாட், பிரியா பூனியா ஆகியோரும் முதல் மூன்று 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் டியோல், அனுஜா பட்டில், ஷபாலி வர்மா, மன்சி ஜோஷி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து