முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி பெட்ரோலிய துறை அமைச்சராக இளவரசர் அப்துல்அஜீஸ் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

கெய்ரோ : சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை அமைச்சராக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சவுதி அரேபியா நாடு எண்ணெய் வளம் அதிகம் நிறைந்தது. அந்நாட்டின் பெட்ரோலிய மற்றும் தாதுவளங்கள் அமைச்சராக உள்ள அல் - பலி என்பவரை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த செவ்வாய் கிழமை அவர் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனம் சவுதி அராம்கோவின் இயக்குனர்கள் வாரியத்தில் இருந்து முழுவதும் நீக்கப்பட்டார். ரஷ்ய - சவுதி அரேபிய வர்த்தகம், பொருளாதார மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான அரசு ஆணைய சந்திப்பில் ரஷ்ய ஆற்றல் அமைச்சர் அலெக்சாண்டர் நோவக்குடன் அல்-பலி பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆவார். இதனை தொடர்ந்து, அந்த பதவிக்கு சவுதி இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர், பதவி விலகும் அமைச்சரிடம் இருந்து பொறுப்பினை ஏற்று கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து