நடிகை தேவயானி தாயார் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
devayani mother passed away 2019 09 08

சென்னை : நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று  காலை காலமானார்.

சென்னையில் வசித்து வந்தவர் லட்சுமி ஜெயதேவ். இவர், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை லட்சுமி ஜெயதேவ் திடீரென உயிரிழந்தார். கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை ஜெயதேவ் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தாயார் காலமானார். லட்சுமி ஜெயதேவ் மறைவு தேவயானி மற்றும் நகுலின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த லட்சுமி ஜெயதேவுக்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் தேவயானி, நகுல் ஆகியோர் திரைத்துறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து