இயக்குநர் ராஜசேகர் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      சினிமா
director rajasekar passed away 2019 09 08

சென்னை : திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது(59). பாலைவனச் சோலை படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் 4 கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்திருப்பார் ராஜசேகர்.

ராபர்ட் - ராஜசேகர் என்ற பெயரில், மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். சீரியல்களிலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார் 

குறிப்பாக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர். அண்மைக் காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். ராஜசேகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து