முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மறைவு - இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிஞர்களில் மிக புகழ்பெற்றவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி தன்னுடைய 95 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம். மறைந்த ராம் ஜெத்மலானி வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சமூகத்தின் முக்கிய பிரமுகராகவும் ஆற்றிய பணிகள் ஏராளமானவை மட்டுமல்ல, தனித்தன்மை மிகுந்ததாக அமைந்திருந்தன. ராம் ஜெத்மலானி ஆற்றிய அரும்பணிகளை இந்திய நாடு இன்னும் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும். மறைந்த ராம்ஜெத்மலானியின் குடும்பத்தாருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறோம். இவ்வாறு அவர்கள் அதில் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து