அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனைக்கு சாம்பியன் பட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      விளையாட்டு
Bianca Andreescu champion 2019 09 08

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பியன்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸும் பியன்காவும் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19 வயது இளம் வீராங்கனை பியங்காவை சமாளிக்க முடியாமல் செரினா வில்லியம்ஸ் பலமுறை தடுமாறினார். இறுதியில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பியன்கா வெற்றி பெற்றார். 37 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைக்க இருந்த நிலையில் இளம் வீராங்கனையிடம் செரினா தோல்வியடைத்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து