மைதான ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத்தையும் வழங்கிய சஞ்சு சாம்சன்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      விளையாட்டு
Sanju Samson 2019 09 08

தென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட மைதான ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத்தையும் வழங்கினார் சஞ்சு சாம்சன்.

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரை இந்தியா ‘ஏ’ அணியை 4-1 எனக் கைப்பற்றியது. ஐந்து போட்டிகளும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை செய்து வருவதால் அடிக்கடி மழை பெய்து வந்தது. இதனால் போட்டி 50 ஓவர் முழுவதும் நடைபெறவில்லை. என்றாலும், மைதான ஊழியர்கள் தேங்கியுள்ள தண்ணீரை விரைவாக வெளியேற்றி ஆடுகளத்தை தயார் செய்ததால் அனைத்து போட்டிகளிலும் முடிவுகள் எட்டப்பட்டன. ஐந்தாவது போட்டி 20 ஓவராக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 48 பந்தில் 91 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இவர் ஐந்து போட்டிகளில் இரண்டில் இடம் பிடித்து விளையாடினார். மைதான ஊழியர்களின் பணியை வெகுவாக பாராட்டிய சாம்சன், தனக்கு கிடைத்த ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தையும் அவர்களுக்கு அளித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து