சென்னையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Vinayagar-meltdown 2019 09 08

சென்னை : சென்னையில் நேற்று  2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னை மாநகரம் முழுவதும் காவல் துறையின் அனுமதி பெற்று பொது இடங்களில் 2,602 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் கடந்த 2 நாட் களாக கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய 5 இடங்களை காவல் துறை தேர்வு செய்துள்ளது. மேற்கண்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் மாநகர காவல் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ராட்சத கிரேன்கள், படகுகள், உயிர் காக்கும் குழுக்கள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுக்கள், கடற்கரையில் சிலை களை எளிதாக கொண்டு செல்ல டிராக் வசதிகள் உள்ளிட்ட முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக குறைவான சிலைகளே கடலில் கரைக்கப் பட்டன. நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும், சென்னை மாநகர காவல் துறை சார்பில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து