அமெரிக்காவிற்கு தலிபான் இயக்கம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      உலகம்
US warn Taliban 2019 09 09

காபூல் : அதிகமான உயிர்பலி ஏற்படும் என அமெரிக்காவிற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான் பயங்கரவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது. 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும் அமெரிக்கா 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்நிலையில் காபூலில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் பலியாகினர்.

இதனையடுத்து தலிபான்கள் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் தரப்பிலிருந்து எதிர்வினை எழுந்துள்ளது. டொனால்டு டிரம்பின் முடிவை தலிபான் இயக்கம் விமர்சனம் செய்துள்ளது.

டொனால்டு டிரம்பின் முடிவு அமெரிக்காவிற்கு அதிகமான இழப்பை நேரிடச்செய்யும். நம்பகத்தன்மை பாதிக்கும். அதனுடைய அமைதிக்கு எதிரான நிலைப்பாடு உலகத்திற்கு தெரியவரும். இனி உயிர்கள் மற்றும் சொத்துக்கள் இழப்புகள் அதிகரிக்கும் என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து