சந்திராயன் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு: சூரிய மண்டல ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயார் - நாசா அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      உலகம்
US applauds Chandrayaan 2019 09 09

வாஷிங்டன் : சூரிய மண்டல ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தரை இறங்காமல் போய்விட்டது. இது இந்தியாவுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதே நேரத்தில் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

இதுவரை எந்தவொரு நாட்டினாலும், ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென்துருவப்பகுதியை சென்றடையும் இந்தியாவின் முயற்சி, மயிரிழையில்தான் வெற்றி பெறத்தவறி விட்டது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள திட்டங்களுக்கு இது பாடமாக இருக்கும்.

இந்தியாவின் சந்திரயான்-2 விண்கல திட்டத்தை  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ வெகுவாக பாராட்டி உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு உள்ளது.

அவற்றில் கூறி இருப்பதாவது:-  

நிலவின் தென் துருவ பகுதியில் தங்களது சந்திரயான்-2 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.  உங்களின் இந்த பயணத்தின்மூலம் எங்களுக்கு ஊக்கம் அளித்து இருக்கிறீர்கள்.  எதிர்காலத்தில், நமது சூரிய மண்டல ஆராய்ச்சியில் உங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை எதிர் நோக்கி உள்ளோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகமும் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து