பத்திரப்பதிவு கட்டண குறைப்பு குறித்து முதல்வருடன் பேசி முடிவு: ஓ.பி.எஸ்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      தமிழகம்
O Panneer Selvam 2019 03 31

சென்னை : பத்திரப்பதிவுக் கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை அருகே திருவேற்காட்டில் ஆர்.எம்.கே. நிறுவனத்தின் ஆர்.எம்.கே. சோழா கார்டன் கிளப் அவுஸ் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அப்போது கட்டுமான சங்கங்களை சேர்ந்த சச்சின் சந்திரா மற்றும் புகழேந்தி ஆகியோர் தற்போது 11 சதவீதமாக இருக்கும் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பத்திர பதிவுக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கேட்டுக்கொண்டனர். கூடிய விரைவில் முதல்வருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து