தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ரூ.3,750 கோடி முதலீட்டில் துபாய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      தமிழகம்
Agreement sign 2019 09 09

சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ரூ.3,750 கோடி முதலீட்டில் துபாய்  நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

முன்னதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் துபாய் நகருக்குச் சென்றடைந்தார். இந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் "Business Leaders Forum" என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய "துபாய் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டம்" முதல்வரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூபாய் 3,750 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம், 10,800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து