கடினமாக உழைத்து அணியில் எனக்கான இடத்தை பெற்றுள்ளேன் :ரிஷப் பந்த்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      விளையாட்டு
Rishabh Pant 2019 09 09

புதுடெல்லி : நான் எதையும் இலவசமாக பெற்று இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. கடினமாக உழைத்து அணியில் எனக்கான இடத்தை பெற்றுள்ளேன் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். டோனியின் மாற்று விக்கெட் கீப்பராக கருதப்படும் 21 வயது ஆகும் ரிஷப் பந்துக்கு, முன்னதாகவே வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என சிலர் கூறுகிறார்கள்.ஆனால் நான் எதையும் இலவசமாக பெற்று அணியில் இடம் பிடிக்கவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில்,வீரர்களுக்கு முன்னதாகவே வாய்ப்பு கிடைப்பது சிறப்பான நிகழ்வில் ஒன்று. நான் எதையும் இலவசமாக பெறவில்லை. கடினமாக உழைத்து அணியில் எனக்கான இடத்தை பெற்றுள்ளேன். இந்திய அணிக்கான எனது இடத்தை யாரும் பரிசாக தரவில்லை.நீங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால், உங்களால் தேர்வாக முடியாது. ஒவ்வொருவரும் அவர்களுடைய இடத்தை நியாயப்படுத்த வேண்டும் என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து