சர்வதேச அளவில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் - சுகாதார நிறுவன அறிக்கை தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      உலகம்
Suicide 2019 09 10

ஜெனீவா : சர்வதேச அளவில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2010 முதல் 2016-ம் ஆண்டுவரை நடந்த தற்கொலைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கின்றனர். பொதுவாக இவர்களில் தூக்கு போட்டும், துப்பாக்கியால் சுட்டும், வி‌ஷம் குடித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய முறை கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த, மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. இலங்கை, லுமுவேனியா, லெசோதோ, உகாண்டா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 13.7 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் வங்காளதேசம், சீனா, லெகோதோ, மொராக்கோ மற்றும் மியான்மரில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆவர். இவர்களில் இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் தற்கொலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக தற்கொலை செய்பவர்கள் பட்டியலில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவை தவிர சாலை விபத்துகளிலும் அதிக அளவில் மரணம் நிகழ்கிறது. மொத்தத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது கொலை மற்றும் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களை விட அதிகம். ஒவ்வொரு மரணமும், சம்பந்தப்பட்ட குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே உலக நாடுகள் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேசிய சுகாதாரம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும். இத்தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரிய சிஸ் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து