ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவர் இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்கலாம் - மும்பை கோர்ட்டு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      இந்தியா
Indirani investigate indirani 2019 09 10

மும்பை : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தனது மகள் ‌ஷினா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதை விசாரித்த நீதிபதி ஜக்தலே, இந்திராணியை அவர் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் சென்று விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். காலை 9.30 மற்றும் 12.30 மணிக்கு இடையே இந்த விசாரணையை நடத்துமாறு தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து