ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷ்யா

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      விளையாட்டு
Olympic hockey india-russia qualify 2019 09 10

லாசானே : ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷ்யாவுடன் மோத உள்ளது.

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி சுற்று போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் டிரா (குலுக்கல்) சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதன்படி ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 22-வது இடத்தில் உள்ள ரஷியாவை சந்திக்கிறது. பெண்கள் பிரிவில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13-வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளி பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து