காங்கோ நாட்டில் இந்திய ராணுவ அதிகாரி மாயம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      உலகம்
indian Army officer magiic congo 2019 09 12

கின்ஷசா : காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படை குழுவில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி மாயமானார்.

ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப்படையில் இந்தியா சார்பாக கவுரவ் சோலன்கி என்ற ராணுவ அதிகாரி பணியாற்றி வந்தார். காங்கோ நாட்டில் பணிபுரிந்த இவர் அங்குள்ள கயாகிங் என்ற நகரில் அமைந்துள்ள கிவு என்ற ஏரிக்கு சென்ற பிறகு மாயமானார். ராணுவ அதிகாரிகள் பலர் அங்கு குழுவாக சென்று திரும்பினார். ஆனால், கவுரவ் சோல்ன்கி மட்டும் திரும்பவில்லை. இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக உள்ளூர் அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கோவில் இந்திய ராணுவ அதிகாரிகள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய படைப்பிரிவுக்கு நார்த் கிவு மாகாணத்தின் கோமா என்ற நகரில் தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து