விக்ரம் லேண்டருக்கு சிக்னல்களை அனுப்பி சமிக்ஞைகளை பெற முயற்சிக்கும் நாசா

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
Vikram-lander 2019 09 11

ஸ்ரீஹரிகோட்டா : சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விக்ரமின் சமிக்ஞைகளை பெற நாசா விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டு தங்கள் விண் ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூலமாக அதற்கு தகவல்களை அனுப்பி கொண்டிருக்கின்றனர்.

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பை மீட்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரமின் சமிக்ஞைகளை பெற முயற்சி மேற்கொண்டு தங்கள் விண் ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூலமாக அதற்கு ஹலோ ஹலோ என தகவல்களை அனுப்பி கொண்டிருக்கின்றனர்.

இதை தொடர்ந்து சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலையில் விக்ரம் லெண்டரிலிருந்து 14 நாட்கள் வரை சமிக்ஞைகள் பெற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். லெண்டருக்கு சிக்னல் அனுப்பப்படும் போது நிலவு ஒரு வானொலி அலைவரிசையை போல சிறிய அளவிலான சிக்னலை திருப்பி அனுப்புகிறது.

இதையடுத்து நாசாவின் கே.பி.எல், டி.எஸ்.என். நிலையங்கள் கலிபோர்னியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் விண்ணில் ஆழமாக ஊடுருவி ஆய்வு செய்யும் 4 பெரிய ஆன்டெனாக்கள் உள்ளன. இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் பல செயற்கைகோள்களுடன் ரேடியோ வாயிலாக தொடர்பு கொள்ளும் வசதியும் இங்கு உள்ளது. இந்த நிலையங்களின் உதவியுடன் நாசா இஸ்ரோவின் விக்ரம் லெண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது. பூமிக்கும், நிலவுக்குமான சரியான தூரத்தை கணிக்க நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் ஒன்று விக்ரமுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இதில் நாசா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. விக்ரம் நிலவில் தரையிறங்கும் போது அந்த லேசர் ரிப்ளெக்டரும் இயக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் விக்ரம் நிலவின் பரப்பில் சிக்கி கொண்டிருப்பதால் நாசாவும் தனது பேலோட் வரிசை கண்ணாடிகளை இழந்து நிற்கிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து