முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3,000 பென்சன் வழங்கும் திட்டம் - ஜார்கண்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : 60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பென்சன் வழங்கும் பிரதான் மாதிரி கிஷான் மான்- தன் யோஜனா என்ற திட்டத்தை ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கிசான் மான்-தன் யோஜனா திட்டம்:

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 36,000 தொகையை மாத தவணைகளாக பிரித்து ஓய்வு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 3000 வழங்கப்படும். 18 முதல் 40 வயதுடைய சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ. 55 முதல் ரூ. 200 வரை செலுத்தலாம். விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசும் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை எட்டும் போது அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கும்.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த பென்சன் திட்டத்தை நேற்று பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய பிரதமர் மோடி,

இந்த திட்டத்திற்காக ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாட்டை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து அவர்களை உரிய இடத்தில் வைப்போம் என்றும் கூறினார். 

இந்த திட்டத்தில் 18 வயதுள்ள ஒரு விவசாயி மாதம் 55 ரூபாயும், 40 வயதையடைந்த ஒரு விவசாயி மாதம் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். விவசாயிகள் அளிக்கும் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசும் அளிக்கும். இவ்வாறு பணம் செலுத்தி வந்த விவசாயி 60 வயதை எட்டும் போது அவருக்கு மாதம் தோறும் ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 37,904 பேர் இணைந்துள்ளனர். இதில் 24,952 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதில், 5,179 பேர் 18-லிருந்து 25 வயது உடையவர்களாகவும், 11,777 பேர் 26 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 7,996 விவசாயிகள் 36 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். மேலும் இதில் 10,979 பெண்களும், 13,973 ஆண்களும் அடங்குவர். மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவசாயிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து