தங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      வர்த்தகம்
gold rate 2019 08 31

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.28,944 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ. 3618-க்கு விற்பனையானது.

கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் விலை, கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 30 ஆயிரத்து 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதிக்குப் பின் தங்கத்தின் விலை சரிந்து வருவதுடன், ஒரு வாரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து ரூ. 28,944-ஆக விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதே போல, உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிது குறைந்ததால் காரணமாகவே தங்கத்தின் விலை உள்நாட்டு சந்தையில் குறைந்துள்ளது. மேலும், இந்த விலை தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக சந்தையில் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ள நாடுகளிடம் இருந்து பெறக் கூடிய விவரங்கள் வைத்தே தங்கம் விலை மேலும் அதிகரிக்குமா? அல்லது குறைமா? என சொல்ல முடியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து