15 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      தமிழகம்
OPS assistant offices 2019 09 12

நகர் ஊரமைப்பு துறையில், புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 15 திட்ட உதவியாளர்களுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கனிவான நோக்குடன் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள கட்டிடக் கலை, திட்ட உதவியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் 2 பணியிடங்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் வாயிலாக 12 பணியிடங்களுக்கும், நகர் ஊரமைப்பு துறையில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்த ஊழியர் ஒருவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும், ஆக மொத்தம் 15 பணி நியமன ஆணைகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில், நேற்று துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் வழங்கி, பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, அரசு முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் சந்திர சேகர் சாகமூரி ஆகியோர் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து