பத்ம விருதுகளுக்கு மேரிகோம், பி.வி.சிந்து உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் பரிந்துரை - விளையாட்டுத்துறை அமைச்சகம் தகவல்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      விளையாட்டு
PV Sindhu 2019 09 12

புது டெல்லி : நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல, பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெயரை பரிந்துரை செய்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு அமைச்சக பரிந்துரையில் 9 பேரும் பெண்கள் என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மகளிரை கவுரவிக்கும் விதமாக இந்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை பட்டியலை உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் கமிட்டியினருக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த பட்டியலில், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பெயரை நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2013-ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும் மேரி கோம் பெற்றுள்ளார். இந்த விருதை மேரி கோம் பெற்றால் நாட்டின் 2-வது உரிய விருதை பெரும் 4-வது விளையாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்னதாக 2007-ம் ஆண்டில் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 2008-ம் ஆண்டில் கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மலையேற்ற வீரர் சர் எட்மண்ட் ஹேலாரி ஆகியோர் பத்ம விபூஷண் விருதினை பெற்றுள்ளனர்.

மேலும், இந்த பட்டியலில் 2015-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற பி.வி. சிந்துவின் பெயரும் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பி.வி.சிந்து டென்னிஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதனை தொடர்ந்து, இந்த பட்டியலில் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மான் பிரீத் கவுர், வினேஷ் போகட், மாணிக் பத்ரா, ராணி ராம்பால், சுமா ஷீரூர், டேஷி, நுங்குஷி மாலிக் ஆகியோரின் பெயர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுக்கு தேர்வானவர்கள் விவரத்தை ஜனவரி 25-ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து