முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரு முறை சந்திக்கிறார் இம்ரான்கான்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த வார இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்பை இம்ரான் கான் 2 முறை சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் முறையாக ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வார் என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கானின் பயண அட்டவணையின்படி, இம்ரான் கானும் -டிரம்ப் இடையிலான முதல் சந்திப்பு மதிய உணவு விருந்துடன் இருக்கும் என்றும், மற்றொன்று தேநீர் விருந்துடன் இருக்கும் என்று ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி அமெரிக்காவில் தங்கியிருந்து கலந்து கொள்ளும் கூட்டங்களின் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவிற்கு இம்ரான் கானின் இரண்டாவது முறை பயணம் இதுவாகும். ஐ.நா. பொதுச்சபையின் 74-வது அமர்வில் கலந்து கொள்ள இம்ரான் கான் வரும் 21-ம் தேதி அன்று நியூயார்க்கிற்கு செல்கிறார். அவர் 27-ம் தேதி அன்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 2018-ல் அவர் பதவியேற்ற பின்னர் இது அவரது முதல் ஐ.நா. பொதுச்சபை அமர்வாகும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்த விவகாரம் குறித்து அவர் ஐ.நா.வில் பேசுவார் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து