முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி- டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுசபையின் 74ஆவது கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி உரையாற்ற இருக்கிறார். மோடி நலமா? என்ற தலைப்பில் நடைபெறும் மோடி உரையாற்ற உள்ளார்.

சுமார் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிபர் ட்ரம்பும் மோடியுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதி படுத்தியது. நிகழாண்டு இரு தலைவர்களும் சந்தித்து கொள்ளும் 3-வது சந்திப்பு இதுவாகும்.

இந்த நிலையில், மோடி- டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு மிக்க வாயந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஸ்ரீங்கலா தெரிவித்துள்ளார். மோடி நலமா? நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாதது, வரலாற்று சிறப்பு மிக்க வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் சுமுக நிலையை மட்டும் இல்லாமல், மோடி, டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நல்ல புரிதலையும் நட்புணர்வையும் இந்த சந்திப்பு பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து