முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர்வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டசத்து மாத மாவட்ட அளவிலான ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்.
கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும்.  எனவே, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவு வகைகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருவதன் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.  ஊட்டச்சத்து கண்காட்சியில் 1000 நாட்களின் முக்கியத்துவம் (கருத்தரிப்பு முதல் குழந்தையின் இரண்டு வயது வரை), வயிற்றுப்போக்கை தடுக்கும் முறைகள், ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம், இரத்தசோகையை தடுக்கும் வழிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.  மிகவும் பயனுள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.  அங்கன்வாடி பணியாளர்களின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தில்  கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வ.ஜெயந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்களும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து