47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      விளையாட்டு
Ashes series draw 2019 09 16

லண்டன் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 1972-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 47 வருடங்கள் கழித்து டிரா ஆகியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என டிராவில் முடிந்தது. தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கோப்பை, இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி ஆஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கோப்பை வழங்கப்பட்டது. அதேசமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 1972-ம் இங்கிலந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என டிரா ஆனது. அதன்பின் 47 ஆண்டுகள் கழித்து தற்போது டிரா ஆகியுள்ளது. 1972-ம் ஆண்டு இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துள்ளது. 1938, 1962-63, 1965-66, 1968-ல் நடந்த ஆஷஸ் தொடர்களும் டிராவில் முடிந்துள்ளன

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து